Friday, January 14, 2011

பொங்கல் கவிதை

உழைப்பின் ப‌ல‌ன் பொங்க‌

உள்ள‌த்துள் உவ‌கை பொங்க‌

உலையில் பால் பொங்க‌

உதிப்ப‌து தைப்பொங்க‌ல். . .

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு


வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது


அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Wednesday, December 1, 2010

Be Happy

                                                       சந்தோஷம்

அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.

பெறுவதிலோ, வைத்திருப்பதிலோ சந்தோஷம் இல்லை. தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.

சந்தோஷம் என்பது நறுமணத் திரவியத்தைப் போல. உங்கள் மீது சில துளியாவது படாமல் உங்களால் அடுத்தவர் மேல் அதைத் தெளிக்க முடியாது.

ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது அவனிடம் என்ன இருக்கிறது, எதை யாராலும் அவனுக்குத் தர முடியாது அல்லது அவனிடமிருந்து எடுத்து செல்ல முடியாது என்பது நிச்சயம் அவனிடம் இருக்கும் செல்வங்களைவிட, உலகின் கண்களுக்கு அவன் எப்படித் தென்படுகிறான் என்பதைவிட அவசியமானதாகும்.

சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன்.

உள்ளிருக்கும் எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து வரும் சந்தோஷம்தான் உங்களுடனேயே நிலைத்து நிற்கிறது.