பொலிவுடனே பொங்கட்டும் 
இவ்வாண்டுப் பொங்கல்! 
நிரந்தரமாய் தங்கட்டும் 
நிம்மதி நம் வீட்டில்! 
பொல்லாத குணத்தை எல்லாம் 
போகியிலே தீ வைப்போம்! 
இல்லாத நற்குணங்கள் 
இரவல் வாங்கி சேமிப்போம்! 
தைமகளின் பிறந்தநாளை 
தமிழ் மணக்க போற்றுவோம்! 
பகலவனை வணங்கும் நாளில் 
பகைவரையும் வாழ்த்துவோம்! 
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!


